கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க வேண்டும் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

நாளை முதல் கடைகள் திறப்பிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம். அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தெருக்கள் அனைத்தும் சிறப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு நாளை அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை, பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு விதித்துள்ளதால் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்க கூட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பெரியகுளம் காவல்துறை தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே நேர கட்டுப்பாடுடன் திறக்க அனுமதிக்கப்படுவதாக கூறியதால் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரம்ஜான் பண்டிகை வருவதால் பண்டிகை காலம் வரையிலாவது ஜவுலிகடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் நோய் தொற்று பரவலை தடுக்க அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய கடைகள் மட்டுகே திறக்க அனுமதி என நகராட்சி ஆணையாளர் கண்டிப்பாக தெரிவித்துள்ளார் . அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதி எனவும் கொரோனா விதி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அலுவலத்தி நடைபெற்ற வணிகர்கள் சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!