கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையிண்மையால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக பெய்த  கோடை மழையால்  கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொரொனா தொற்றால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள விவசாயிகள் கும்பக்கரை அருவி நீரை அப்பகுதிகளில் உள்ள குலங்களில் நிரப்பி வருகின்றனர். தற்போது கோடை காலத்தில் தங்களது விவசாய பகுதிகளில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து துவங்கி குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளண்ர்.

Translate »
error: Content is protected !!