கப்பலை அழிக்கும் ஏவுகணை…. இந்தியா வெற்றிகரமாக சோதனை!

கப்பலில் இருந்து எதிரியின் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

லடாக் விவகாரத்தில் அண்டை நாடான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளை குவித்துள்ளன.

அத்துடன், இந்தியா சீரான இடைவெளியில் வெவ்வேறு ரக ஏவுகணை பரிசோதித்து வருகிறது. அவ்வகையில் இன்று, எதிரியின் கப்பலை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதித்து பார்த்துள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை வங்கக்கடலில் இருந்த நீண்ட தொலைவு இலக்கை, துல்லியமாக தாக்கியதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!