கமலுக்கு தெரியுமா.? குக்கிராமங்கள் வரை நடக்கும் “அந்த” பிரச்சாரம்…!

சென்னை,

அரசியல் களத்தில் ஒவ்வொன்றும் கவனிக்கப்படுகிறது என்பது திரைத்துறையில் போற்றப்படும் கலைஞனான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

ஆனால் அவரை பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் குக்கிராமங்கள் வரை பரப்புரை செய்வது அவருக்கு தெரியுமா என்பது பெரும் கேள்விதான். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவையே கடுமையாக விமர்சித்து வருகிறார் என்றும் அதிமுகவை மற்றும் பாஜகவை அவ்வளவாக விமர்சிப்பது இல்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

அதிமுக நேரடியாக விமர்சிக்காமல் புரியாத அளவிற்கு தூய்மையான தமிழில் திட்டும் கமல், திமுகவை மட்டும் நேரடியாக புரியும் மொழியில் விமர்சிப்பதாக திமுகவினர் கொதிக்கிறார்கள். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை பற்றி விரிவாக பேசுவதற்கு முன்பு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் முதல்முறையாக கமலின் மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. ஒவ்வொரு ஊராக போய் கமல் ஹாசன் பிரச்சாரம் செய்தது அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துதான். குறிப்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக ஒரு முறை டிவியை உடைத்து ஆவேசத்தை தீர்த்துக் கொண்டார். அந்த அளவிற்கு கமல் விமர்சத்தவர்.

ஆனால் இந்த முறையும் அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்து தான் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளோ அதிமுகவை விமர்சிப்பது இல்லை என்று குற்றம்சாட்டுகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன என்பதை இதுவரை அவர் அறிக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சிகள், ஒன்று இடது என்று இருக்க வேண்டும்.

அல்லது வலது என்று இருக்க வேண்டும். அதென்ன மையம் என்று விமர்சிக்கிறார்கள். குறிப்பாக இப்போது சொன்ன குற்றச்சாட்டு கம்யூனிஸ்டுகள் ஒருமுறை வைத்தது. அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிராக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து கேள்வி கேட்டார் கமல்ஹாசன்.

அதன்பிறகு சமூக வலைதளங்களில் பலர் கமல்ஹாசனை பி டீம் என்று விமர்சிக்க தொடங்கினார். இதற்கு கடுமையாக கொந்தளித்த கமல், யார் பி டீம் நான், காந்தியின் டீம் என்று பதில் அளித்தார்,. அதன்பிறகு கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்க தொடங்குவது சமூக வலைதளங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இதை மறைமுகமாக எதிர்க்கட்சிகள் ஊக்குவித்தன. இந்நிலையில் தேர்தல் நெருங்கிய நிலையில் குக்கிராமங்கள் வரை கமல் ஹாசனை பாஜகவின் பி டீம் என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்ய தொடங்கி உள்ளன. ஆனால் இந்த பரப்புரை எல்லாம் எடுபடாது என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர். நகர்புறங்களிலும், கிராமப்புறங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், முதல் முறை வாக்காளர்களை கமல்ஹாசன் அதிகம் கவர வாய்ப்பு உள்ளது.

இரு கழகங்களின் ஆட்சியை மற்ற வேண்டும் நினைக்கும் பலர் கமல்ஹாசனின் பக்கம் சாய்வார்கள் என்றும், இதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் பாஜகவின் பி டீம் என்று விமர்சிப்பதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசியல் நோக்கர்கள் இதுபற்றி கூறும் போது, பாஜகவின் பி டீம் என்ற பிரச்சாரம் பெரிய அளவில் கைகொடுக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்தார்கள்.

 

Translate »
error: Content is protected !!