கமலுடன் இணையும் அந்த நபர் யார்?…இதனால் அரசியல் களம் சூடு பிடிக்குமா?

சென்னை,

கமலுடன் ஒரு முக்கிய புள்ளி இணைய போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. இதனால் அரசியல் களம் மறுபடியும் சூடுபிடித்து வருகிறது. விரைவில் தேர்தல் வர உள்ளது.. இதில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பேசப்பட்டு வருபவர் கமல்ஹாசன்தான்..

இந்த முறை இவருடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் விருப்பத்தில் உள்ளது போல தெரிகிறது. மேலும் சில புள்ளிகள் மய்யத்தில் இணையும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்தவகையில் மூத்த தலைவர் செல்வப்பெருந்தகை பெயரும் அடிபட்டு வருகிறது.

விசிகவின் சார்பில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானவர்தான் செல்வப்பெருந்தகை.. 2 வருஷத்துக்கு திருமாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.. மாநில தலைவரானார்.. பிறகு அதிலிருந்தும் நீக்கப்பட்டார். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..

. சிதம்பரத்தின் ஆதரவாளராக அறியப்பட்டார்தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு, மறுபடியும் கட்சிக்குள் ஏதோ பிரச்சனை போல தெரிகிறது.. அதிருப்தி காரணமாக உள்ளதாகவும், அதனால், கமல் கட்சிக்கு இவர் வர போவதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கசிந்து வருகிறது.

கொஞ்ச நாட்களாகவே இவர் கமலுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும், கூடிய சீக்கிரம் மக்கள் நீதி மய்யத்தில் செல்வ பெருந்தகை சேர நிறைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. பொதுவாக, காங்கிரஸ் தரப்புடன் கமலுக்கு ஒரு இணக்கமான போக்கு இருக்கவே செய்கிறது.. காங்கிரஸே கமலுடன் இணைந்து கூட்டணி வைக்க பேச்சும் நடந்து வருவதாக கூறப்படுகிறது..

அந்த வகையில், செல்வப்பெருந்தகை மய்யத்தில் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி அவர் கமலுடன் இணைந்தால், சமுதாய வாக்குகள், தனக்கிருக்கும் ஆதரவு வாக்குகளை கமல் பக்கம் திருப்கபி விடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

ஆனாலும், கமல், இன்னும் பெரிதாக யோசிக்கலாமே.. பெரிய பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாமே.. அதிமுக, திமுகவுக்கு மாற்று என்று சொல்லும் கமல், பெரிய கட்சிகள் யாரையும் கூட்டணியில் இதுவரை சேர்க்கவில்லை..

ஆம் ஆத்மி மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது.. இந்த கட்சிக்கு தமிழ்நாட்டில் ஓட்டு வங்கி இல்லை.. அதிமுகவை எதிர்க்க திமுகவுடனோ, திமுகவை எதிர்க்க அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் மட்டுமே மய்யத்துக்கு எதிர்கால வாழ்வு உண்டு என்று முணுமுணுப்புகளை அரசியல் நோக்கர்கள் எழுப்பத்தான் செய்கின்றனர். எனவே கமல், இந்த தேர்தலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள, வலையை இன்னும் பெரிசாக வீச வேண்டி உள்ளது.

Translate »
error: Content is protected !!