விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாக்கியதால் விஜய்யை அடுத்து கமலை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை – அனிருத். 2021 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தலைப்பின் டீசரும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து மீண்டும் அதே பெயரில் படம் வர இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.