கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ ஆய்வு

கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.. ஆய்வு செய்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன்கடைகளை திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கம்பத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதில் சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் ஆர்.டி.. சக்திவேல், கம்பம் பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பேரில் கம்பம் உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், கடைகளின் முன்பு வட்டங்கள் வரைந்து வைக்கும் படியும், கூட்டத்தை குறைக்க டோக்கன் வழங்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!