கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து கடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய கம்பம் என்.ராமகிருஷ்ணன் மீண்டும் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கம்பம் தொகுதியில் பதிவான வாக்குகள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் அ.தி.மு.க. வேட்பாளரை விட 42 ஆயிரத்து 413 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார்.
இந்த தொகுதியில் உள்ள வாக்குகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
வாக்கு விவரம்
மொத்த வாக்குகள் – 2,86,645
பதிவானவை – 2,02,275
கம்பம் என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.) – 1,04,800
எஸ்.பி.எம்.சையதுகான் (அ.தி.மு.க.) – 62,387
சுரேஷ் (அ.ம.மு.க.) – 14,536
அனீஸ் பாத்திமா (நாம் தமிழர் கட்சி) – 12,347
வெங்கிடேஷ் (ம.நீ.ம.) – 4,647
கதிரவன் (நியூ ஜெனரேஷன் மக்கள் கட்சி) – 236
பாண்டிச்செல்வம் (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) – 151
ராதாகிருஷ்ணன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி) – 122
லால் பகதூர் சாஸ்திரி (மை இந்தியா கட்சி) – 120
முத்துமுனீஸ்வரன் (சுயே) -451
சரவணன் (சுயே) – 321
பிரகாஷ் (சுயே) – 155
முத்துச்செல்வம் (சுயே) -136
மாரிமுத்து (சுயே) – 106
தாவீது ராஜா (சுயே) – 101
நோட்டா-1,659
அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, ம.நீ.ம. வேட்பாளர்கள் உள்பட 13 பேர் டெபாசிட் இழந்தனர்..