கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம்

கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக்ஸோபதி என்ற புதிய கலப்பு சிகிச்சை முறையை எதிர்த்தும், ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி அறுவைசிகிச்சை சிகிச்சை மருத்துவங்களை தங்களது மருத்துவமனைகளில் செயல்படுத்தலாம் என்ற அரசாணையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட பல்  மருத்துவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் புதிதாக பதிந்த இளம் பல் மருத்துவரை நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சி இஏ எனப்படும் மருத்துவமனை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட பல் மருத்துவர்களின் தரப் பரிசோதனை மற்றும் மேற்பார்வை குழுவில் பல் மருத்துவர்களின் இடம்பெறச் செய்ய வேண்டும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிறுவனங்களை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Translate »
error: Content is protected !!