கல்விச்செய்திகள்…

  • CPS இரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்குபெறும் ஆர்ப்பாட்டம் சென்னையில்  நடைபெறவுள்ளதுநாளிதழ் செய்தி.
  • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திறனறி போட்டிகள், பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
  • 11-ம் வகுப்பு/ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு -12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம்ஆன்லைன் வழியாக செலுத்த தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு பெற்ற 356 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
  • கல்லுாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட தேர்வில், கவுரவ விரிவுரையாளர் களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்த தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
  • திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தில் கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அரியர் பாடங்களுக்கான தேர்வை மீண்டும் கட்டணம் செலுத்தி மாணவர்கள் எழுத வேண்டும் என்று அறிவிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
  • குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • 12 பொதுத்தேர்வுபள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளமீள்வாய்ப்பளித்தல்இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஜாக்டோ ~ ஜியோபோராட்டத்தில் பங்கேற்றோர் மீது தொடுத்த கைது மற்றும் ஒழுங்கு 17பி நடவடிக்கையை முதல்வர் ரத்து செய்தும், அதற்கான நடைமுறையை அதிகாரிகள் இன்னும் துவக்கவில்லைஎன, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு.
  • அனைத்து மட்டத்திலான அரசு ஊழியர்களும், அனைத்து பணி நாட்களிலும் எந்தவித விலக்கும் இன்றி பணிக்கு வரவேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Translate »
error: Content is protected !!