கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம்.!

புதுடில்லி.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் மற்றும் கேரளா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது,

பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு 2019-2020 ல் மாநில வாரியான செயல்திறன்களை ஒப்பிடும் போது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை மேம்படுத்தி உள்ளன. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பள்ளிகல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு குறித்து மத்திய அரசு ஒன்று, இரண்டு, என10 கிரேடுகளாக மாநிலங்களை வரிசை படுத்தி உள்ளது. இந்த வரிசையில் முதல் கிரேடில் எந்த மாநிலமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது கிரேடில் தமிழகம், கேரளா,உள்பட ஐந்து மாநிலங்கள் 900 முதல் 950 மார்க்குகள் பெற்றுள்ளது.

மூன்றாமிடத்தில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, குஜராத் , மகாராஷ்டிரா ஹரியானா, டில்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. நான்காம் இடத்தில் ஆந்திரா, டையுடாமன், இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, .பி, மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

Translate »
error: Content is protected !!