காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்தி குத்து

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி தேசபாண்டே நகரை சேர்ந்தவர் ஆயிஷா. தனது தாயுடன் வசித்து வரும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் வாங்கி கொடுத்த ஆட்டோவை இஸ்மாயில் என்பவர் ஓட்டி வந்தார். இவர் ஆயிஷாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இது குறித்து ஆயிஷாவிடம் தெரிவித்தற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆயுஷா நேற்று ஹூப்பள்ளிக்கு வந்தார். அப்போது, இஸ்மாயில் ஆயிஷாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயம் அடைந்த ஆயிஷா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை கத்தியால் குத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!