காரில் கடத்தப்பட்ட நபரை அதிரடியாக மீட்ட வாணியம்பாடி காவல் துறை… 4 பேர் கைது

வாணியம்பாடியில் இருந்து திண்டுக்கல்க்கு காரில் கடத்தப்பட்ட நபரை புகாரின் பேரில் அதிரடியாக மீட்ட வாணியம்பாடி காவல் துறையினர். கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது .மேலும் கடத்தலுக்கு கார் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைரோஸ்  இவர் தோல் தொழில் செய்துவரும் நிலையில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் ரூபாய் 2.50 லட்சம் மதிப்பிலான தோல்களை பெற்றுக் கொண்டு அதற்கான பணத்தை திருப்பித் தராமல் சுமார் ஒரு வருட காலமாக அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஒரு வருட காலமாக தோல்களை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராத பைரோஸ் இடம் பணத்தை வசூலிக்க பல முறை அலைந்து திரிந்த இஸ்மாயில் நேற்று தனது மகன் இப்ராம்சா மற்றும் இவனது கூட்டாளிகளான யாசின் மற்றும் அப்துல் பாசித் உள்ளிட்ட நால்வரும் திண்டுக்கல்லில் இருந்து இண்டிகா கார் ஒன்றில் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் பைரோஸ் அகமது வீட்டிற்கு  வந்துள்ளனர்

அப்போது பைரோஸ்  இடம் தனது பணத்தை திருப்பி கேட்ட இஸ்மாயில் பைரோஸ் அகமது பணத்தை திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்து தனது மகன் இஸ்மாயில் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து பைரோஸ் குண்டுகட்டாக தூக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இதனை பார்த்து கூச்சலிட்ட பைரோஸின்  மனைவி ராபியா பஸ்ரி உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் பைரோஸ் அகமது கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

உடனடியாக காரின் எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்த வாணியம்பாடி காவல்துறையினர் கார் செல்லும் பாதையை கண்டறிந்து காவல்துறையினர் துரத்தி சென்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சுங்கசாவடி அருகே காரை மடக்கிய காவல்துறையினர் காரில் கடத்தப்பட்ட பைரோஸை மீட்டுள்ளனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட இஸ்மாயில் அவரது மகன் இப்ராம் சா மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் நான்கு பேரை கைது செய்த வாணியம்பாடி காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். கொடுத்த கடனை வசூலிக்க கடத்தலில் ஈடுபட்ட நால்வரையும் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!