காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு

சென்னை டிஜிபி அலுவலகத்தில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு இன்று வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

 

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் (Police commemoration Day) அனுசரிக்கப்படுகிறது. இன்று காலையில் சென்னை காமராஜர் சாலையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கடந்த 01.09.2019 முதல் 31.08.2020 முடிய ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த 265 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக டிஜிபி திரிபாதி தியாகிகள் நினைவுத்துாணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எம்கே. நாரயணன், ராணுவ தலைமை அதிகாரி பனீட் ஷதா, கடலோக கப்பற்படை பரமேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, முன்னாள் டிஜிபிக்கள், ஏடிஜிபிக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் மனைவி கவிதா உட்பட வீரமரணம் அடைந்த காவலர்கள் ஆகியோரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!