குப்பைகளால்….குப்பை மேடாக மாரிவரும் தாமரைக்குளம்

பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் குப்பை மேடாக மாரிவரும் தாமரைக்குளம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ளது தாமரைக்குளம் கண்மாய். இந்த கன்மாய் 130 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இந்த தாமரைக்குளம் கண்மாய நம்பி 500க்கும் மேற்ப்ட்ட ஏக்கர் விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்ப்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அணைத்தும் தாமரைக்குளம் கன்மாயின் கரையில் கொட்டி வருவதால் கண்மாய் குப்பை மேடாக மாறிவருகிறது.  

மேலும் தற்ப்போது தமிழக அரசு நீர் நிலைகளை தூர்வாரி பாதுகாத்து வரும் நிலையில் கடந்த சில நாட்க்களாக தொடர் மழையால் தாமரைக்குளம் நிரம்பிய நிலையில் தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை கொட்டுவதால் நீர்நிலைகள் உள்ள குப்பைளால் துர்நாற்றம் வீசுவதோடு நீலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உறுவாகி உள்ளது.

எனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து தாமரைக்குளம் கண்மாயை தூர் வாரி தூய்மை படுத்திய நிலையில் தற்போது தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர், எனவே மாவட்ட நிர்வகம் உடனடியாக தலையிட்டு  குப்பைகளை தாமரைக்குளத்தில் கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுத்து நீர்நிலைகலை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Translate »
error: Content is protected !!