குப்பைமேட்டில் இந்திய அரசு தபால் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தபால்களை உரியவர்களுக்கு வழங்காமல் குப்பையில் வீசி சென்ற தபால்துறை ஊழியர்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வந்த கடிதங்களை உரிய நபர்களுக்கு வழங்காமல் தபால் துறையினர் குப்பைமேட்டில் கொட்டி சென்றுள்ளனர்.
குப்பையில் கிடந்த தபால்கள் கடந்த ஆறு மாதங்களாக உரிய நபர்களுக்கு விநியோகம் செய்யப்படாத ஆதார் அட்டைகள், தமிழக அரசால் வழங்கப்படும் அரசு பணி கடிதம், எல்ஐசி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட தபால்கள், மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து அனுப்பப்பட்ட தபால்கள் உரியவர்களுக்கு வழங்காமல் குப்பை மேட்டில் தபால் துறையினர் விட்டுச் சென்றுள்ளனர்.
குப்பையில் கிடக்கும் தபால்கள் அனைத்தும் கடந்த ஆண்டு 11 மாதம் முதல் வழங்கப்படாத தபால்களாக உள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் இந்திய தபால்துறையினர் உரிய நபர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடிதங்களை வழங்காமல் குப்பையில் கொட்டி சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பை மேட்டில் தபால்கள் கொட்டி கிடக்கும் தகவல் அறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் குப்பையில் கிடந்த தபால்கள் அனைத்தையும் கைபற்றி காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.