மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் பகுதியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், கும்பகரை அருவியில் நீர்வரத்து துவங்கி அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குதூகலமடைந்துள்ளனர்.
அதேபோல், கும்பக்கரை அருவியின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.