கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்றிதழ் (கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

72 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் இருக்க வேண்டும். விமானம், ரயில் மற்றும் பஸ் மூலம் வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்றிதழைக் காட்டினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் மூலம் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் அது தொடர்புடைய சான்றிதழைக் காட்ட வேண்டும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!