கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு 1,76,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் இன்று 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,212 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 19,478 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,77,788 ஆக அதிகரித்துள்ளது.