கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் உண்பதால் கால்நடைகள் பலியாகும் அவலம்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் கால்நடைகள் அவ்வப்போது பலியாகி வருகின்றன. காட்டுமாடுகளும் இந்த கழிவுகளை உண்டு வருவதால் தொடர்ந்து பலியாகி வருகின்றன. பசு மாடுகளும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் பசு மாடுகளும் அவப்போது பலியாகி வருகின்றன.

இதை தடுக்கும் வகையில் நகராட்சி சார்பில் வைக்கப்படும் குப்பைத் தொட்டிகளில் மூடி இருக்கும் வகையில் அந்த குப்பைத் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நிரம்பி வழியும்  குப்பைத் தொட்டிகளை உடனடியாக அகற்றி நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!