கொடைக்கானல் அருகே குருசரடி பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி கள்ளசாராயம் காய்ச்சி விற்றதாக கூறிகாவல் துறையினர் கைது செய்தனர். 5 லிட்டர் கள்ளசாரயம் பறிமுதல் செய்யப்பட்டது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே குருசரடி பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி 55. இவர் இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார். இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து கொடைக்கானல் காவல் துணைகண்காணிப்பாளர் ஆத்மநாதன் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் ரமேஷ் ராஜா மற்றும் காவலர்கள் சிலர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துரைப்பாண்டி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தது தெரிய வந்தது. மேலும் இவர் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 5 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கள்ளச் சாராயம் காய்ச்சிய துரை பாண்டியை கைது செய்தனர்.