கொரோனா ஊசி போட்டால் குரங்காக மாறிவிடுவோமா? பீதி கிளப்பும் ரஷ்யா!

லண்டனில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குரங்காக மாறிவிடும் அபாயம் இருப்பதாக ரஷ்யா கிளப்பியுள்ள தகவல், பலரையும் அதிரச் செய்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டாபோட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடக்கும் கொரோனா ஆய்வுக்கு எதிராக ரஷ்யா எதிர்மறை பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்தில் தயாராகும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிம்பன்ஸி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாக மாறிவிடுவார்கள் எனவும் ரஷ்யா வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டுள்ளது. 

அத்துடன், இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியும் ஆபத்தானதுதான் என்பதை விளக்கும்  படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு எதிர்மறை பிரசாரங்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி இருக்கிறது. 

இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை குரங்கு போல் சித்தரித்து புகைப்படம் இருக்கிறது. ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!