தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிறைந்து வரும் நிலையில்,
மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்தி சிகிச்சை கொடுக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் விடுதிகளை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே உள்ள மேரி மாத கல்லூரி மாணவர்கள் விடுதியை கல்லூரி நிர்வாகம் கொரோனா நோய் தொற்று சிகிச்சைகாக வழங்கியதால் அங்கு நோயாளிகளுக்கு போதிய வசதிகள் உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது தனியார் கல்லூரி விடுதிகளை கையகப்படுத்தி அதில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அதில் நோய் தொற்றை சித்த சிகிச்சை மூலம் குணப்படுத்த தனியான மையங்கள் அமைக்க உள்ளதாகவும்,
மாவட்டத்தில் ஆக்ஜிசன் பற்றாக்குறை ஏற்படாதவாறு ஆக்ஜிசன் கையிருப்பை கண்காணித்து தொடர் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும், மாநில அரசு வழங்கும் தடுப்பு ஊசிகளை முறையாக பிரித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கு அனுப்பி தடுப்பு ஊசிகளை மக்களுக்கு போட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.