தேனி மாவட்டம் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் பணிகள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரம், தடுப்பு பணிகள் மற்றும் அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நோய்த்தடுப்பு மருந்துகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது
மேலும், மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளான கம்பம் நகராட்சியில் 7 பகுதிகளும், கூடலூர் நகராட்சியில் 5 பகுதிகளும் என மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட இடங்களில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கென 14 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கும்பொருட்டு, மாவட்டம் முழுவதும் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவில் 1 மருத்துவர், 1 பிசியோதெரபிஸ்ட், 1 கிராம செவிலியர் நியமிக்கப்பட்டு, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட பணிகள் தொடர்பாகவும், லோயர்கேம்ப் அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் கம்பம் சுகாதார அலுவலர் அரசக்குமார் நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.