கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரியகுளம் மார்கேட் பகுதிக்கு செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் கட்டைகள் போட்டு அடைந்த்து மார்கெட் செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி தெளித்து கபசுர குடிநீர் வழங்கி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள் மற்றும் மலிகை கடைகள் என அனைத்து கடைகளும் இயங்கி வருவதால் அந்த பகுதி முழுவதும் இடநெரிசலுடன் காணப்படுவதுடன் போக்குவரத்து நெரிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வரும் நிலையில் பெரியகுளம் தென்கரை மார்கெட் பகுதியில் கூட்டத்தை கட்டுப்டுத்தும் விதமாக மார்கெட் பகுதிக்கு செல்லும் அனைத்து பகுதிகளிலும் கட்டைகள் போட்டி அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இட ஒதுக்கப்பட்டு உள்ளே செல்லும் பொதுமக்களுக்கு முதலில் கிருமி நாசினி தெளித்தும், முக கவசம் அணியாமல் வரும் நபர்களை திருப்பி அனுப்பியும், கபசுர குடிநீர் வழங்கி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!