கொரோனா பொது முடக்க நேரத்தில் உதவாத அதிமுக அரசு, கேஸ் விலை ஏற்றத்திற்கு எதிர் குரல் எழுப்பாத அதிமுக அரசு.. 6 சிலிண்டர் வழங்குவோம் என கூறுவதை நம்பாதீர்கள் என கூறி திமுக வேட்பாளர் சரவணக்குமார் வாக்கு சேகரிப்பு..
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தனது பரப்புரையை பெரியகுளம் அருகே உள்ள G.கல்லுப்பட்டியில் இருந்து துவங்கி கெங்குவார்பட்டி, காமக்கபட்டி, செங்குளத்துப்பட்டி, மஞ்சளார் அணை ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்..
அப்போது அங்கு கூடி இருந்த பெண்களிடம் கொரோனா பொது முடக்க நேரத்தில் திமுக தலைவர் அனைத்து குடும்பத்திற்கும் 5000 ஆயிரம் ரூபாய் வழங்க கூறியும் அப்போது வழங்காமல் இப்போது தேர்தல் வந்தவுடன் மாதம் தோரும் 1500 ரூபாய் தருவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளதும்,
கடந்த மாதம் வரை தொடர்ந்து கேஸ் விலை ஏற்றம் 900 ரூபாய்க்கு மேல் சென்ற போது அதை மத்திய அரசுக்கு எதிராக எந்த குரல் எழுப்பாமலும், விலையை குறக்காமலும் இருந்து விட்டு தற்பொழுது வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது பெண்களே நம்பாதீர்கள் என கூறியும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக தேர்தல் அரிக்கையில் கொடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்பேன் எனவும்,
கிராம பகுதிகளின் அடிப்படை தேவைகளை எந்த பாகுபடு இன்றி நிறைவேற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து பரப்புரையில் ஈடுபட்டனர். இந்த மாநில உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா ஒன்றிய செயலாளர் பெரிய பாண்டி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..