கொரோனா விதிகளை கடைபிடிக்காத கடைகள் நடத்த தடை விதிக்கப்படும் – காவல்துறையினர் எச்சரிக்கை

கொரோனா நோய் தொடரின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூல்நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க ஊராடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 100க்கும் மேற்பட்ட காய்கறிகடைகள் நெருக்கடியான பகுதியில் இயங்கி வந்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் பெரியகுளம் தென்கரை பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்கெட்டை பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்நிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிபாளர் முத்துக்குமார் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் இணைந்து காய்கறி வாங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்க அறிவுறித்தியும் காற்கறிகளை வாங்க போடப்பட்ட கட்டங்களில் வாங்கிய பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினர்.

மேலும் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு காய்கறி கடை நடத்தும் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிக்க அறிவுருத்தி ஒலி பெருக்கி மூலம் அறிவுத்தினர். காய்கறி வாங்க வரும் பொது மக்கள்  அனைவருக்கும் வெப்பமானியை கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதித்தும்கிருமி நாசினி தெளித்து காய்கறிகளை வாங்க அனுமதித்தனர்.

மேலும் கொரோனா நோய் தொற்றின் விதிகளை கடைபிடிக்காத காய்கறி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து நோய் கட்டுபாட்டு விதிகளை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு காய்கறி கடை நடத்த தடை விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சாரித்து காய்கறி வாங்க வந்த ஆனைவருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சார்பு ஆய்வாளர் ராம பாண்டி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Translate »
error: Content is protected !!