கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்

கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கோவிட்ஷீல் தடுப்பு மருத்து செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ள நிலையில்.. நோய்களை கட்டுப்படுத்தும் கோவிட்ஷீட் மருந்துகளை அரசு மருத்துமனைகளில் வைத்து 45 வயத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு மருத்துகளை மக்களுக்கு செலுத்தும் பணியினை கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்து 45 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பு மருந்தினை செலுத்தும் பணியினை சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களை அழைத்து மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து அவர்களின் ஆதார் எண் பதிவு செய்த பின்பு மருத்து செலுத்தி வருகின்றனர்.

நோய் தொற்றை கட்டுப்படுத்தும் மருந்து செலுத்துவதின் அவசியத்தை அந்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோரும் முன் அறிவிப்பு செய்து 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து தடுப்பு மருந்து செலுத்தி வருகின்றனர். இதில் கீலவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் துணைத் தலைவர் ராஜசேகர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடனிருந்தனர்..

 

 

Translate »
error: Content is protected !!