கோட்டை வட்டாரத்தில் குமுறல்.! நடவடிக்கை எடுப்பாரா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

தலைமைச் செயலகத்தில் ஏறத்தாழ 36 துறைகளில் 6 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றும் கடைநிலை ஊழியரில் இருந்து, உயர் அரசு அலுவலர்வரை  அனைவரின் பதவி உயர்வு, துறை மாற்றம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவற்றை மனிதவள மேலாண்மைத்துறையே கையாள்கிறது.

அதிகாரம் மிகுந்த இந்த துறையின் துணைசெயலாளராக பல ஆண்டுகளாக அமர்ந்திருக்கும் ஸ்டிபன், தலைமைச்செயலக பணியாளர்களில் தனக்கு வேண்டப்பட்டவர்களை விருப்பப்பட்ட துறைகளில் பணி அமர்த்துவதையும், வேண்டாதவர்களை தலைமைச்செயலகத்திற்கு வெளியே அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். நாள்தோறும் மாலையில் கோட்டையில் உள்ள புனித மெரி சர்ச்சில் ஆஜராகிவிடும் அவர், அங்கேயே அத்தனை டீலிங்குகளையும் நடத்திவருகிறாராம் . இவரால் பாதிக்கப்பட்டவர்கள், துறை அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கவனத்துக்கு இவர்மீதான புகார்களை கொண்டு செல்கிறார்களாம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா?.

Translate »
error: Content is protected !!