கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாடுகளை பிடித்து விற்பனை செய்யும் கும்பல் – தேனி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கதவே கோவில் என்னும் சிறப்பு மிக்க திருக்கோவில் ஆகும்.

இங்கு சாமி தரிசனம் செய்ய வருவோர் வேண்டியது நிறைவேறினால் சாமி க்கு சிறப்பு பூஜை, அன்னதானம், பொங்கல் வைத்தல் மற்றும் மாடு வளர்த்து அதனை கோவிலில் வந்து விட்டு சென்று விடுவார்கள். கொரோனா தொற்று நோயின் மூன்றாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் மாவட்டம் நிர்வாகம் வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து ஒரு குடும்பம் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேர்த்தி கடனாக மாடு வளர்த்து அதனை கோவில் முன்பு உள்ள தூணில் கட்டிவிட்டு சாமி தரிசனம் செய்து விட்டு சென்று உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து அந்த கோவில் மாட்டினை அந்த பகுதியில் வசித்து வரும் ஒருவர் கழட்டி சென்று மாட்டினை அவரது வீட்டில் கட்டி உள்ளார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஏன் கோவிலுக்கு விட்ட மாட்டினை இவ்வாறு கட்டி  உள்ளார் என்று கேட்க அதற்க்கு அவர் கோவில் நிர்வாகத்தில் வேலை செய்யும் நபர்கள் தான் இதை என்னிடம் தந்தார்கள் என்று பேசி உள்ளார்.

அதுமட்டுமின்றி எனது வீட்டுக்கு எப்படி நீங்க வந்து கேட்கலாம் என்று மிரட்டி உள்ளார். இதை போன்று தான் கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாட்டினை ஒரு சிலர் பிடித்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். இது பற்றி கோவில் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினால் கூட இதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தேனி மாவட்ட ஆட்சியர் இது போன்று திருட்டு வேலை செய்யும் நபர்கள் மீது இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் கோவில் நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!