கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழு.. கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார்.

சில வாரங்களாகவே கோவையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டாலும் பற்றாக் குறை குறையவில்லை.

இதன் காரணமாக, ஆக்சிஜன் தேவையால் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாநகர போலீஸ் சட்டம்ஒழுங்கு உதவி கமிஷனர், மண்டல போக்குவரத்து அலுவலர், சென்ட்ரல், கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள். கோவை மருத்துவமனைகளில் உள்ள மொத்த ஆக்சிஜன் படுக்கை, கட்டில், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தினமும் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்வர்.

இதுதவிர, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பது, தேவையான ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைப்பதால், எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Translate »
error: Content is protected !!