கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்,அன்றாட கூலிகள் தொடங்கி கைவிடப்பட்டவர்கள் வரை உணவுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள்.
கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் கைடுகள், வீட்டு வேலை செய்துவந்த பெண்கள் எனக் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகைய மக்களின் பசியைப் போக்கத்தான், ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசியும் மளிகைப் பொருள்களும் வழங்கப்படுகின்றன என்று சொல்கிறது, தமிழக அரசு.
பொதுவாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் எப்படியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கல். மணலுடன், கருப்பு அரிசி, பழுப்பு அரிசி, மாவுத்தூள், தவிட்டுத் தூசி மற்றும் குப்பைகளுடன் ஒவ்வாத மணத்துடன் இருக்கும் அந்த அரிசியும்கூட, சரியான எடையில் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைகூட பெரும்பாலான மக்களுக்கு தேவையில்லாத பொருளாகத்தான் ரேஷன் அரிசி இருந்தது.
ஆனால், கொரோனோ ஏற்படுத்திய நெருக்கடி, லட்சக்கணக்கான மக்கள் சாப்பாட்டுக்காக ரேஷன் அரிசியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை உருவாகி விட்டது. சரி, இப்போது அரிசியின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மிகவும் தரமற்றதாக உள்ளது, இந்த அரிசியை பொதுமக்கள் சமையலுக்கு பயன்படுத்த முடியாது, இதுபோன்ற புகார்களையும் குடும்ப அட்டை சம்பந்தமான புகார்களை தெரிவிக்க மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் கலாதேவியை தொடர்பு கொண்டால் தொடர்பை எடுப்பதில்லை,
இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளன மேலும் வாரத்தில் ஒரு நாள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் கலாதேவி பணிக்கு வருவதே அபூர்வம் ஏற்கனவே இவர் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் அவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள…
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்கள் சம்பந்தப்பட்ட மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் கலாதேவி மீதுள்ள புகாரை ஆய்வு நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களுக்கு தரமான ரேஷன் பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் பொது விநியோகத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்கள் வீட்டுத் தேவைக்காக ஒரு முறை இந்த அரிசியை சமைத்து பார்த்துவிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்..
அதல்லாமல் பெயரளவுக்கு ரேஷனில் அரிசி போடுகிறோம் என்று கல்லு மணல் குப்பைகளை போடுவது ஏற்புடையது அல்ல அதை கண்காணிக்கும் மேலதிகாரிகளும் அமைதியாக இருப்பதும் ஏற்புடையது அல்ல மேலும் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதால் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது கொரோனா தொற்று முடியும் வரை இந்த பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்