கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகும் தகவல்களால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் உள்ளது.

இருப்பினும் தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து எடுத்துவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் தற்போது பொதுமக்களிடையே குறைந்து வருகிறது.

இதனால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி போடும் எண்ணம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏராளமானவர்கள் தடுப்பூசி போட வருவதால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கே தற்போது தடுப்பூசி இல்லாத சூழ்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள் இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள், தடுப்பூசி இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் நிர்வாகத்திடம் கேட்டபோது. தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும், தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டு விடுவதாகவும்,

மருந்து இருப்பு இல்லை என்றாலும் ஊசி போட வருபவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை, மருத்துவமனை ஊழியர்கள் குறித்துக்கொண்டு, தடுப்பூசி வந்தபின் உரிய நேரத்தில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறுகின்றனர். நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளை மட்டும் பொதுமக்களுக்கு போட்டதாக  தெரிவித்தனர்.

இன்று 22/04/2021 தடுப்பூசி இருப்பு இல்லாததால் தான் போடவில்லை நாளை கோவி சில்டு 200 எண்ணிக்கையில் வழங்கியிருக்கிறார்கள். அது நாளை பொதுமக்களுக்கு போடப்படும் என்று கூறினார்கள் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலர் கலராக விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இதை நம்பி அரசு அரசு மருத்துவமனையில் சென்று கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று சென்றால் அங்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி பல நேரங்களில் திருப்பி அனுப்பி விடுகிறார்கள் இதனால் அங்குள்ள மருத்துவ ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும்  வாக்குவாதம் ஏற்படுகிறது மேலும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்புக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் மேம்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது

2014-ஆம் ஆண்டு வரையிலும் தமிழகத்தில் மட்டுமே தடுப்பூசிகளை தயாரிக்கும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. பெரும் தேவை உள்ள சூழல்களில் இந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளை விரைந்து தயாரித்தளித்தன. சென்னை கிண்டியில் உள்ள BCG ஆய்வகத்தில் அண்மையில்தான் மீண்டும் BCG தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டது. குன்னூரில் இயங்கிவரும் பாஸ்டர் நிறுவனமோ இன்னும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தொடங்க முடியாதநிலையில் உள்ளது.

2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி தயாரிப்புப் பூங்கா, மத்திய அரசின் நிதிக்காக இன்றுவரை காத்திருக்கிறது. தனியார்மயம் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்துக்கும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்களை அரசு தள்ளியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும், கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று கூறிய நிலையில், இந்தியாவில் மட்டும்தான் பிரதமரே தடுப்பூசியின் விலையை அறிவிக்கிறார்.

இதே நிலை நீடித்தால் ஏழை எளிய மக்கள், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஆயிரக் கணக்கான பணம் செலுத்தித்தான் தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படும், ஆகவே தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, போதிய கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை, மேலும் முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தற்போது இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து இல்லை என்று கூறுவதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

Translate »
error: Content is protected !!