சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு -ஸ்டாலின் விளக்கம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முன்வராததால் திமுக உறுப்பினர்கள் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இன்று (16-09-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் போது  நான் பேசியதற்கு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விளக்கமளித்துப் பேசினார். அவரது விளக்கத்தைத் தீர்மானமாக நிறைவேற்றித் தரக் கோரினோம்.என்றார்

தொடர்ந்து பேசிய அவர், அரசின் விளக்கத்தைவிடத் தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்டமன்றத்தின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால், எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்துத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Translate »
error: Content is protected !!