வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை, மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று, 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மேலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 62 ரூபாய் அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக சிலிண்டரின் விலை 1293 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திடீரென சமையல் எரிவாயு விலையை அரசு உயர்த்தியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.