சாலை வசதி இல்லாத மழை கிராமங்களுக்கு குதிரைகள் மூலமாக வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் பாதுகாப்புடம் கொண்டு செல்லப்பட்டது.
நாளை நடைபெறும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலுக்கு வாக்குசாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் காலை முதல் நடந்து வருகின்றது. இதன் ஒரு பகுதியான தேனி மாவட்டம் போடி சட்ட மன்ற தொகுதிக்கு அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட மலை கிரமங்கள் உள்ளது. இதில் சாலை வசதியே இல்லாத ஊரடி, ஊத்துக்காடு, குரவன்குழி, கரும்பாறை, சின்னமூங்கி, பெரியமூங்கி, சுப்ரமனியபுரம், பட்டூர், படப்பம்பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிரமங்களில் 459 வாக்களர்கள் உள்ளனர்.
இந்த கிராங்களுக்கு ஊத்துகாட்டில் அரசு ஆரம்ப பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிரங்மங்களுக்கு பெரியகுளம் அருகே உள்ள சோத்துபாறை அணை பகுதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாக்கு சாவடி எண் 10 ஊத்துகாடு வாக்குசாவடி மையத்திற்க்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் குதிரைகள் மூலமாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் மலை கிராம மக்களின் உதவியுடன் குதிரைகளில் வாக்கு பதிவு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு குதிரைகள் உடன் வாக்கு பதிவு மையத்திற்கு நடந்து செல்கின்றனர்.