தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 13.11.2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பச்சைமால்(53) என்பவர் கொலை வழக்கில், எதிரிகளை 43 மணி நேரத்தில் கைது செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்,
ஆறுமுகநேரி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் ரகு, திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவலர் இசக்கியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார், முதல்நிலை காவலர்கள் எழில்நிலவன், ரமேஷ், காவலர் பாலமுருகன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 12.11.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 450 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குற்றவாளியை கைது செய்ய உதவியாக இருந்த தூத்துக்குடி மத்திய பாகம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு, ஆயுதப்படை காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், அய்யப்பன் ஆகியோருக்கும்,
கடந்த 14.11.2020 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து, ரூபாய் 1,00,000 பறிமுதல் செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமை காவலர் மோகன் ஜோதி, காவலர் சிலம்பரசன் ஆகியோருக்கும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தனிப்பரிவு தலைமைக் காவலர் கந்த சுப்பிரமணியன், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் கிறிஸ்டி பெமிலா ஆகியோர் உட்பட 20 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.