சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து

சிவகாசி,

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்ட்டுள்ளது.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து நேரிட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சோகம் நீங்குவதற்குள், இன்று இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. வெடிவிபத்து நேரிட்ட ஆலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாதநிலை இருந்தது.

வெடிவிபத்தில் சிக்கிய சுரேஷ் என்ற தொழிலாளி மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த ஆலைக்குள் எத்தனை தொழிலாளிகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் பகல் 1 மணி வரை தெரியவரவில்லை.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில், ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தன மாரியப்பன் (45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட அறைகள் இருந்தன. இந்த ஆலையில் சுமார் 50 தொழிலாளர்கள் பணியாற்றினர்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பென்சில் பட்டாசுகளுக்கு முனைமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி வெடித்துச் சிதறின. இதில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாயின.

மேலும் தீயில் கருகி ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த தங்க லட்சுமி (40), நடுசூரங்குடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கற்பகவள்ளி (22), செல்வி (33), மேலபுதூரைச் சேர்ந்த நேசமணி (38), அன்பின் நகரத்தைச் சேர்ந்த சந்தியா (20) உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 

 

Translate »
error: Content is protected !!