செங்குன்றத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உள்பட 6 பர் கைது

சென்னை, செங்குன்றம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உட்பட 6 நபர்களை போலீசார் கைது செய்து 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கொசப்பூர், செட்டிமேடு மெயின் ரோட்டில் ராம்தேவ் மெட்டல் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணிபுரிந்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஹமீது மற்றும்நபர்கள் இந்நிறுவனத்தின் மாடியில் தங்கி வருகின்றனர். ஹமீது மற்றும் 2 பணியாளர்களும், நேற்று அதிகாலை 3 மணியளவில் 4 நபர்கள் நிறுவனத்தின் மாடிக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஹமீது மற்றும் 2 நபர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியும், கையால் தாக்கியும், ஹமீது வைத்திருந்த 1 செல்போன், பணம் ரூ. 500- மற்றும் ஹமீதின் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் ஈஸ்வர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குற்றவாளிகளின் அடையாளங்களை கேட்டறிந்து கொள்ளையில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை ஹரிபிரசாத் (19) சாதிக்பாஷா (23), அவரது சகோதரர் நசீர்பாஷா (23), கொறுக்குப்பேட்டை பலூன் () ரமேஷ் (24) ஆகிய 4 நபர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹமீதின் 1 செல்போன், பணம் ரூ. 500- மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் (37) அவர் ஓட்டி வந்த லாரியை செங்குன்றம், வடபெரும்பாக்கம், லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, நேற்று அதிகாலை லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 40 மணியளவில் 2 நபர்கள் லாரியில் படுத்திருந்த ராமலிங்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த 1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராமலிங்கம் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செங்குன்றம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை அன்பு (23), பெரியார் நகர் ஸ்ரீநாத் (23) ஆகியநபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி 2 குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!