சென்னை
சென்னையில் விற்பனை செய்த பூதப்பாண்டி, நாங்குநேரியைச் சேர்ந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சைதாப்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை, சுப்ரமணியசாமி கோயில் தெருவிலுள்ள கோயில் அருகில் நேற்று கண்காணிப்புப் பணியில் இருந்தனர். அப்போது அங்கு 2 நபர்கள் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபர்கள் இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி, பூதப்பாண்டியைச் சேர்ந்த விஷ்ணு (24) மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் ரூ.15 ஆயிரம்-, செல்போன்கள் -2 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.