குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 பேர் மீது குண்டாஸ் – போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை நகரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிவங்கையைச் சேர்ந்த ரவிகுமார் () ராக்கப்பன் (42), மயிலாப்பூர் பல்லக்குமா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் () கருக்கா வெங்கடேசன் (44),  அனகாபுத்துார் ஏழுமலை () ரஜினி ஏழுமலை (55), சீனிவாசன் (45), கோட்டூர்புரம் நெல்சன் (47), மானாமதுரை ராஜாசிங்கம் () ராஜா (33) ஆகிய 6 பேர் மீது  சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சூர்யா () காவாமேடு சூர்யா (22), சத்யா () காவாமேடு சத்யா (21) ஆகிய 2 நபர்கள் மீது ஓட்டேரி காவல் நிலையத்திலும், மனோஜ் () மனோஜ்குமார், வசந்தபிரியன் () பவர் வசந்த் ஆகியோர் மீது -1 வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுமேற்கண்ட 10 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் போலீஸண் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!