சென்னையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த டாஸ்மாக் பார் ஊழியரை போலீசார் கைது செய்து 149 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, சைதாப்பேட்டை போலீசார் நேற்று அதிகாலையில் நந்தனம், சிஐடி நகர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிஐடி நகர் கெனால் பேங்க் ரோட்டில் ஒருவர் ரகசியமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் லட்சுமணன் (24) என்பதும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 149 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் லட்சுணணன், அந்த பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.