சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சாவை மீட்டனர்.

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில், கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் தனிப்படையினர் தலைமைக்காவலர்கள் உதயகுமார், ரத்தினகுமார், முதல்நிலை காவலர் லுாயிஸ் ஆகியோர் அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் இஸ்லாம் (வயது 25), ஜாஜிம் உதின் (வயது 22) ஆகிய இருவரும் .எம்.ஆர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தங்களது மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து அறிஞர் அண்ணா சாலை தெரு, சோழிங்கநல்லுாரில் வீடு வாடகை எடுத்து பதுக்கி வைத்து கண்ணகி நகர் பகுதியில் விற்பணை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!