சென்னை செகரேட்டரியேட் காலனியில் சிக்கிய 13 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை செகரேட்டரியேட் காலனியில் போலீசார் நடத்திய சோதனையில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, மூலக்கடை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன்பேரில் செகரேட்டரியேட் காலனி போலீசார் அங்கு சென்று ரெய்டு நடத்தினர். அதனையடுத்து அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்கடை, அஞ்சகம் நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது (30) என்பவரை போலீசார் கஞ்சாவுடன் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செகரேட்டரியேட் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் சாகுல் ஹமீது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!