செம்மஞ்சேரியில் 6 கிலோ கஞ்சா கடத்திய குண்டூர் வாலிபர் கைது

சென்னை, செம்மஞ்சேரியில் கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை, செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் பாபு, அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி செம்மஞ்சேரி போலீசார் செம்மஞ்சேரி ஆலமரம் பஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு கண்காணித்த போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நீல நிற டிராவல் பேக்குடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்திய போது உள்ளே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்திய நபர் பெயர் மோனி (வயது 24) என்பதும் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து செங்கல்பட்டில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் அதனை விற்பனை செய்து வந்துள்ளார். விசாரணைக்குப்பின்னர் மோனியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!