# வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-ஹாத்ரஸ் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
# நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ல் திருமணம்
# மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளிக்காது- மமதா பானர்ஜி
# ஹத்ராஸ் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு பிரமாண பத்திரம் தாக்கல்-ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும- உத்தரப்பிரதேச அரசு
# துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்திப்பு
# டிராக்டரில் சோபா போட்டு உட்காரும் ‘வி.ஐ.பி. விவசாயி’ ராகுல்காந்தி”- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
# நாடு முழுவதும் அக்.15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி
# நாடு முழுவதும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி-50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
– மத்திய அரசு
# அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்திப்பு
# மோட்டார் வாகன சட்டத்தில் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனப் பதிவு எண் தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த வேண்டும்
– சென்னை போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தல்
# புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து 5 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
# கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டியை கைவிடுக. மத்திய நிதி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்.
# தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா திருகால் நாட்டுதலுடன் தொடங்கியது.-கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தசரா விழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
# நாடு முழுவதும் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது
# மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையாக ரூ.20 ஆயிரம் கோடியை விடுவித்தது மத்திய அரசு-மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை ஜூன் மாதத்திற்கு பிறகும் வழங்க மத்திய அரசு முடிவு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
# உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை பெற ராணுவ வீரர்கள் குறைந்தபட்சம் ஏழாண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதிமுறையை பாதுகாப்புத்துறை ரத்து செய்துள்ளது.
# வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் கட்டுமான சாதனங்களுக்கும், அக்டோபர் மாதத்தில் இருந்து டிராக்டர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் – மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
# பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலையோர உணவு விற்பனையாளர்களையும், இணையதள சேவையில் இணைக்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையும், ஸ்விக்கி நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன-சென்னை, தில்லி, வாரணாசி, அகமதாபாத், இந்தூர் நகரங்களில் முதல் கட்டமாக திட்டம் தொடக்கம்
# மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,903 கன அடியிலிருந்து 11, 318 கன அடியாக குறைந்துள்ளது.-மேட்டூர் அணை நீர்மட்டம் : 98.51 அடி, நீர்இருப்பு : 62.927 டி.எம்.சி. -டெல்டா பாசனத்திற்கு 6,000 கன அடிகிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி நீர் வெளியேற்றம்
# அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கையெழுத்து இயக்க தொடக்க விழா காட்டுமன்னார் கோவிலில் நேற்று இரவு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பெற்றது.
# கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் (2020-21) அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது,
# தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில ஆட்டோ மூலம் பொதுமக்களிடையே கோவிட் 19 விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
#மதுரை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் இன்று, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், மானகிரி கால்வாய் சுத்தப்படுத்தப்படும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.