செய்தி துளிகள்…

  • அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு.
  • 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல்.
  • அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • கடந்த மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி ரூ.1,13,143 கோடிக்கு வசூல் மத்திய நிதியமைச்சகம் அறிக்கை
  • தேர்தல் தினத்தன்று பணியிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி.
  • கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், காலவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
  • திருப்பத்தூர், வாணியம்பாடியில் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு.
  • ஜோலார்பேட்டை அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா...வினர் மீது வழக்குப்பதிவு.
  • கொரோனாவுக்கு உலக அளவில் 2,549,513 பேர் பலி.
  • கோவை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விடுமுறை அட்டவணையில் மார்ச் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வங்கிச் சேவைகள் மற்றும் வேலைகளை விரைந்து முடித்துபயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
  • திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் இன்று தொடங்குகிறது.
  • நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடத்திவரப்பட்ட 60 கிலோ கஞ்சா கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல்; 4 பேர் கைதுஇலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக தகவல்.
  • பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு ₹20,000 கோடி மதிப்பிலான எரிபொருட்கள் சேமிப்புமத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
  • சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோரக்பூரில் இருந்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 50 பேர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வருகை.
  • சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் தேமுதிக நகர துணை செயலாளர் ராஜ்குமார் (43) மர்ம நபர்களால் வெட்டிக்கொலைபோலீசார் விசாரணை.
  • நேற்று நடந்த 2வது தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் அதிமுகபாஜக இடையே பேச்சுவார்த்தை.
  • ஐதராபாத்தில் நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டி : தங்கம் வென்று அசத்திய எஸ்..இசக்கிராஜா
  • நேற்று நடந்த 2வது தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் அதிமுகபாஜக இடையே பேச்சுவார்த்தை
  • நாகை : வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில், இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
  • சென்னை புத்தகக் கண்காட்சி வரலாற்று நினைவுச் சின்னங்களுடன் மக்கள் இரண்டற கலந்து வாழ்கின்றனர்நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர்.
  • குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தே.மு.தி.. வட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
  • ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே நல்லாம்பட்டியில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்.        
  • மேட்டூர் அணை நீர்மட்டம் 103.04 அடியில் இருந்து 102.93 அடியாக சரிவு; அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி நீர் திறப்பு.
  • தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கை தொடர்பாக 2 பேர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • சென்னை அசோக் நகரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பே கைது.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், மனைவியை கொலை செய்து போலீசில் சரண்நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக வாக்குமூலம்
  • தெலங்கானா : ஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 1லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி

கல்விச்செய்திகள்:-

  • சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே தேர்தல் பணி, மதிப்பூதிய உயர்வு, உணவு & போக்குவரத்து வசதி குறித்து தேர்தல் ஆணையத்தில் TNPTF மனு.
  • கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் பெற்றுவரும் மதிப்பூதியம் 1.1 2020 முதல் ரூ 15,000 லிருந்து ரூ 20,000 உயர்த்தி அரசாணை வெளியிடப் படுகின்றன.
  • மாநில அரசால் வழங்கப்படும் வீடு கடன், வாகன கடன் உள்ளிட்ட முன்பணம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் (2020-21ஆம் ஆண்டு) குறித்த அரசாணை வெளியீடு.
  • இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு
  • புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் ஏற்கெனவே உள்ள நடைமுறை தொடரும். எல்லோரும் எழுதித் தேர்ச்சி பெறுவார்கள் என்று துணைநிலை ஆளுநர்  தெரிவித்துள்ளார்
  • 3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
  • தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 2021- நடத்தை விதிமுறை குறித்த கையேடு தொகுப்புதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • அரசு கல்வி நிறுவனங்களில் அனைத்து ஆவணங்களையும் தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
  • மார்ச் 8ல் நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு: சீருடை பணியாளர் ஆணையம் அறிவிப்பு
  • பரிக்சா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) போட்டிதேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பாரதப் பிரதமருடன் கலந்துரையாடலாம்பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை.
Translate »
error: Content is protected !!