சேதமடைந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மாங்காய்கள்.. நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான டவ்தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊரை சுற்றியுள்ள கொட்டகுடி, பிச்சாங்கரை, உலக்குஉருட்டி, வடக்கு மலை ஊத்தாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று  வருகிறது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அடித்த சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக இப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாமரங்களும் மாங்காய்களும்  விழுந்து மிகப் பெரும் சேதம் அடைந்தது. இதனை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் மறுநாள் காலை தங்களது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மாமரங்களும் மாங்காய்கள் சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழக முன்னாள் துணைமுதல்வரும் அதிமுக கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான .பன்னீர்செல்வம் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவருடைய குறைகளை கேட்டறிந்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து அவருடைய கோரிக்கை மனுவை உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து டவ்தே போடிமெட்டு மூணார் நெடுஞ்சாலையில் பெரும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து சாலைகள் சேதமடைந்து உள்ளதை அடுத்து அப்பகுதியில் சென்று பார்வையிட்ட பன்னீர்செல்வம் அப்பகுதியில் மேலும் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார் இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!