சேலத்தை மொத்தமாக தூக்கும் திமுக.. எடப்பாடியில் ஈபிஎஸ் வெற்றி உறுதி! விகடன் கருத்துக்கணிப்பு

சேலத்தை மொத்தமாக தூக்கும் திமுக.. எடப்பாடியில் ஈபிஎஸ் வெற்றி உறுதி! விகடன் கருத்துக்கணிப்பு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெல்லும் என்று ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவில் யாரெல்லாம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது, அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

சேலம் மாவட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம். அங்குள்ள எடப்பாடி தொகுதியில் தான் அவர் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக உள்ளதாகவே ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சேலம் மாவட்டத்தில், எடப்பாடி, கெங்கவல்லி(தனி), ஆத்தூர்(தனி), ஏற்காடு(தனி), ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, சேலம் – மேற்கு, சேலம் – வடக்கு, சேலம் – தெற்கு என 10 தொகுதிகள் உள்ளன. இதில் எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புஉள்ளது. அதேநேரம் சேலம் – மேற்கு, சேலம் – வடக்கு, சேலம் – தெற்கு உள்பட 6 தொகுதிகளில் திமுக வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. சங்ககிரியில் இழுபறி உள்ளதாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க-வில் சம்பத்குமாரும் போட்டியிடுகிறார். இங்கு பெரிய வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமியே வெல்வார் என்று விகடனின் கணிப்புகள் கூறுகின்றன.

திமுக சார்பில் சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி இங்கு போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கோவிந்தம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நல்லதம்பி போட்டியிடுகிறார் இதில் ரேகா பிரியதர்ஷினியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாம். அ.தி.மு.க-வில் ஜெயசங்கரன், தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை, அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.அ.ம.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் கணிசமாக அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிப்பதால், சின்னதுரையே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது விகடன் கணிப்பு.

மேட்டூர் தொகுதியில் பா.ம.க-வில் சதாசிவமும், தி.மு.க-வில் சீனிவாச பெருமாளும் போட்டியிடுகிறார்கள். வன்னியர் வாக்குகள் பெரிய அளவில் கைகொடுப்பபதால் , பாமகவின் சதாசிவம் வெல்ல வாய்ப்பு உள்ளதாம். சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சுந்தரராஜனும், தி.மு.க-வில் ராஜேஷூம் மோதுகிறார்கள். இங்கு இழுறி உள்ளதாக கூறுகிறது விகடன் கணிப்பு.

பா.ம.க-வில் இரா.அருளும், தி.மு.க-வில் சேலத்தாம்பட்டி ராஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இதில் திமுகவின் சேலத்தாம்பட்டி ராஜேந்திரனே வெல்வார் என்று கூறப்படுகிறது. சேலம் – வடக்கு தொகுதியில், அ.தி.மு.க-வில் சேலம் மேற்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ வெங்கடாசலமும், தி.மு.க-வில் இதே தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் மோதுகிறார்கள். இதல் திமுகவின் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனே வெல்வார் என்கிறது கணிப்பு.

அ.தி.மு.க-வில் பாலசுப்ரமணியன், தி.மு.க-வில் சரவணன், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த, தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் வெங்கடாசலம், அ.தி.மு.க ஓட்டுகளைப் பிரிப்பதால் திமுகவின் சரவணன் ரேஸில் முந்துவதாக கூறுகிறது விகடன் கணிப்பு. வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க-வில் ராஜமுத்து, தி.மு.க-வில் டாக்டர் தருண், அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கேசெல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் திமுகவின் தருண் வெல்ல வாய்ப்பு உள்ளதாம்..

Translate »
error: Content is protected !!