அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலைபகுதியில் மழையிண்மையால் சோத்துப்பறை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து 118 அடியக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 124.31 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் 126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பறை அணைக்கு நீர்வரத்து 70 கன அடியாக உள்ளதால் சோத்துபாறை அணை முழு கொள்ள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால் வராகநதி ஆற்றின்கரையின் ஓரம் உள்ள பெரியகுளம் வடுகபட்டி மேல்மங்களம் ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் ஆகிய பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ளாபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளனர்.
மேலும் வராகநதி ஆற்றின் கறையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ ஆற்றை கடக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தற்போது சோத்துப்பறை அணயின் நீர்மட்டம் 124.31 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 70 கன அடியாக உள்ளதாலும் விறைவில் முழு கொள்ள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.